Sunday, November 14, 2010

மொட்டை மாடி - கவிதை




படம் நன்றி:http://anandvinay1.blogspot.com/2010/11/blog-post.html

எல்லா
மொட்டை மாடிகளும்
பிரபஞ்சத்திற்கு
அருகில்தான் இருக்கிறது

இரவில்
ரொம்பவும் அருகே
வந்துவிடுகிறது
படுத்துக்கொண்டுப் பார்த்தால்
கைக்கெட்டிய தூரம்தான்

அருகில் இருக்கும் வசதியால்
மேகங்களில் தெரியும்
காதலிகளுடன் பேசுவதற்கு
மொட்டை மாடியோடு
பிரபஞ்சத்தையும்
நகர்த்தி இருக்கிறேன்

கடவுள் முகம் சுளிக்கி இருக்கிறார்

எதிர்படும் பித்ருக்களை
வடாம் துணி போர்த்தி
சமாளித்திருக்கிறேன்

எங்கெங்கோ
அலைந்துத் திரிந்து
இடம் கிடைக்காமல்
லேசாக தூறல் போடஆரம்பித்து
காதலியும் தொலைந்து
பிரபஞ்சமும் தொலைந்து
மீண்டும் மொட்டை மாடிக்கே
வந்துவிட்டேன் கையில்
வடாம் துணியுடன்



-------

8 comments:

  1. மிக அருமையான கவிதை. நானும் மொட்டை மாடியில் படுத்திருப்பதாக உணர்ந்தேன்.

    ReplyDelete
  2. நன்றி ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete
  3. கவிதையை விட புகைப்படம் மிக அருமை. படம் என்னுடையது அல்லவா .
    அப்படியே என்னுடைய பதிவுக்கும் இரு இணைப்பு கொடுத்திருக்கலாம். விளம்பரம் தானே. உங்களை போல்வே வேறு யாரேனும் , படங்களை எடுக்க ஏதுவாய் இருக்கும் :)

    http://anandvinay1.blogspot.com

    ReplyDelete
  4. http://anandvinay1.blogspot.com/2010/11/blog-post.html

    ReplyDelete
  5. Dr.எம்.கே.முருகானந்தன் said...

    //மிக அருமையான கவிதை. நானும் மொட்டை மாடியில் படுத்திருப்பதாக உணர்ந்தேன்//

    நன்றி சார்.

    ReplyDelete
  6. கே.ரவிஷங்கர் said...
    An& said...

    //கவிதையை விட புகைப்படம் மிக அருமை. படம் என்னுடையது அல்லவா .
    அப்படியே என்னுடைய பதிவுக்கும் இரு இணைப்பு கொடுத்திருக்கலாம். விளம்பரம் தானே. உங்களை போல்வே வேறு யாரேனும் , படங்களை எடுக்க ஏதுவாய் இருக்கும் :)//

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!